Monday, December 20, 2010

கண்கள்....!

             


              உன்னை பார்க்கும்போதெல்லாம்
              எல்லை மீறிய என் கண்கள்
              உன் ஏற்ற இறக்கங்களில்
              சிக்கிக்கொண்டு தவிக்கின்றன.......!

காதலா...




நிலநடுக்கம் காண
அளவுகோல் இருக்கிறது....!
என் இதழ் நடுக்கம்
காண எதைக்  கொண்டு அளப்பது....!
ஒரு முத்தம் கொடு ப்ளீஸ்.....!

ராட்சசியே.....

               
              

                  அழகு ராட்சசியே....!
                  நீ கழுத்து வரை இழுத்து விட்டுச்செல்லும்
                  துப்பட்டா என் மூச்சை நிறுத்துகிறது...!

ஆச்சரியத்துடன்........

முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய
இடத்தில் தொடர்புள்ளி வைக்கிறாய்.....
கோபத்தில்.....!
தொடர்புள்ளி வைக்கவேண்டிய
இடத்தில் முற்றுப்புள்ளி வைக்கிறாய்.....
முத்தத்தில்....!
எல்லா நேரங்களிலும் நான் மட்டும்
ஆச்சரியத்துடன் உன்னையே பார்க்கிறேன்/....!

இனிப்பாய்.....

இனிப்பாய்
சில கவிதைகளை
உன் இதழ்களால் மட்டுமே
எழுத முடியும்.....!
நீரிழிவு  நோய் வந்தாலும்
பாராவயில்லை
என் இதழ்களில் தினம் எழுது
கோடி கவிதைகளை.....!

Wednesday, December 1, 2010

அனன்யா

             அழகு ....!
இது சிரிப்பா சில்வண்டின் கூச்சலா..
இது கண்களா கவிதையா
இது கைகளா பஞ்சு மெத்தைய..
இது கால்களா  ரோஜா இதழ்களா...
பிரமனின் உச்சகட்ட படைப்பு இதுவாக தான் இருக்கும்..
அழகு பிரபஞ்சமே  அனன்யா...
உனது பாதம் தீண்ட காத்துஇருக்கிறது எனது நெஞ்சம்....!