நீ சிரிக்கும்போது உன் முகம் சரியும்
திசை பார்த்து ரசிக்கிறேன்.....!
நீ பேசும்போது உன் இதழின்
துடிப்பை பார்த்து ரசிக்கிறேன்.....!
நீ என்னுடன் நடக்கும்போது உன் கன்னங்களின்
நீ என் கவிதைகளை படிக்கும்போது
உன் புருவங்களின் உயர்வில் வழுக்கி ரசிக்கிறேன்.....!
உன் கைபிடித்து பயணிக்கையில் உன் தோள்களில்
என் தலை சாயும் நொடிகளை ரசிக்கிறேன்.....!
நீ முத்தம்தரும் வேளையில் உன் இமைகளின்
படபடப்பை ரசிக்கிறேன்.....!
ரசிக்கிறேன் காதலையும் கவிதை பாட வைத்த
உன்னையும் ஒரு காதலனாய்.....!