Monday, December 20, 2010
கண்கள்....!
உன்னை பார்க்கும்போதெல்லாம்
எல்லை மீறிய என் கண்கள்
உன் ஏற்ற இறக்கங்களில்
சிக்கிக்கொண்டு தவிக்கின்றன.......!
காதலா...
நிலநடுக்கம் காண
அளவுகோல் இருக்கிறது....!
என் இதழ் நடுக்கம்
காண எதைக் கொண்டு அளப்பது....!
ஒரு முத்தம் கொடு ப்ளீஸ்.....!
ஆச்சரியத்துடன்........
இனிப்பாய்.....
இனிப்பாய்
சில கவிதைகளை
உன் இதழ்களால் மட்டுமே
எழுத முடியும்.....!
நீரிழிவு நோய் வந்தாலும்
பாராவயில்லை
என் இதழ்களில் தினம் எழுது
கோடி கவிதைகளை.....!
சில கவிதைகளை
உன் இதழ்களால் மட்டுமே
எழுத முடியும்.....!
நீரிழிவு நோய் வந்தாலும்
பாராவயில்லை
என் இதழ்களில் தினம் எழுது
கோடி கவிதைகளை.....!
Wednesday, December 1, 2010
அனன்யா
அழகு ....!
இது சிரிப்பா சில்வண்டின் கூச்சலா..
இது கண்களா கவிதையா
இது கைகளா பஞ்சு மெத்தைய..
இது கால்களா ரோஜா இதழ்களா...
பிரமனின் உச்சகட்ட படைப்பு இதுவாக தான் இருக்கும்..
அழகு பிரபஞ்சமே அனன்யா...
உனது பாதம் தீண்ட காத்துஇருக்கிறது எனது நெஞ்சம்....!
இது சிரிப்பா சில்வண்டின் கூச்சலா..
இது கண்களா கவிதையா
இது கைகளா பஞ்சு மெத்தைய..
இது கால்களா ரோஜா இதழ்களா...
பிரமனின் உச்சகட்ட படைப்பு இதுவாக தான் இருக்கும்..
அழகு பிரபஞ்சமே அனன்யா...
உனது பாதம் தீண்ட காத்துஇருக்கிறது எனது நெஞ்சம்....!
Sunday, November 28, 2010
திருவிழா தேவதை......!
திருவிழா கூட்டத்தில் உன்னைத்தேடி
எட்டிப்பார்க்கையில் என்னை
உரசிப்போனாய் தேவதையாய்...!
இருவரும் கூட்டத்தில் ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொண்டே நடை பழகிய நம் கால்கள்...!
"சீக்கிரம் வா" என்று உன்னை
அதட்டிய உன் அம்மா...!
அவர் கைபிடித்தபடி கூட்டத்தில் கலந்து
சிறிது தூரம் சென்றவுடன் திருப்பி
என் முகம் துழவிய உன் கண்கள்.....!
ராட்டினத்தை கண்டவுடன்
"அதுல சுத்தணும்" என்றாய் வெகுளியாய்
உன் அப்பாவிடம்.....!
என் பயம் அறியாத உன் அப்பா
"போயிட்டு வா" என்றார்....!
ராட்டினத்தில் ஏறும் போது
"போகாதே" என்று தலை அசைத்தேன்...!
நீ பயப்படுவாயோ என நான் பயந்து....!
நீயும் வா என்றாய் உதட்டை சுழித்து....!
அந்த சுழலில் சுருண்டு விழந்தவனாய்.....!
ராட்டினப் பயணம்.... ! உன்னுடன்.... !
உற்சாகத்திலும் பயத்திலும் பலர் அலற ... !
இமைக்காமல் உன்னை பார்த்துக்கொண்டிருந்தேன்
பயத்துடன்....!
பதறாமல் பறந்துகொண்டிருந்தாய் ராட்டினத்திலும்...!
கீழே இறங்கி கண்மூடி திறந்தபொழுது
நீ இல்லை என்னோடு... !
தேடித் தோற்றேன் உன் முகம் காணாமல் ....!
இப்போது தனியாக சுற்றுகிறது
ராட்டினமும்....!
உன்னைத் தேடி என்
இதயமும்....!
அன்பே...!
Thursday, October 14, 2010
தொலைபேசி காதல்....!
ஒரு காதல் கதையை
விழுங்கிக்கொண்டுதான் இருக்கிறது
ஒவ்வொரு நாணயத்துடன்.....!
தொலைபேசியில் விழுவது
ஒற்றைரூபாய் ஆனாலும்....!
எழுவது 60 நொடி காதல்தானே....!
நீ ஒவ்வொரு முறை
சில்லறையை போடும்போது
சிலிர்க்கிறது
அந்த தொலைபேசியும்.....!
நானும்.....!
உன்னிடம் நேரில் பேசுவதைவிட
தொலைபேசியில் பேசவே
அதிகம் ஆசைபடுகிறது என் காதல்.....!
உன் செவிக்கு
மிக அருகில் நுழைந்து....
உன் இதயம் தொடுவது அது தானே......!
கல்லூரிக்குள் நீ....!
நீ பரீட்சை எழுதும்போது
யோசிப்பாயே....!
அந்த முகத்தை ரசிக்கவே
நானும் உன் வகுப்பில்
படிக்க விரும்புகிறேன்....!
நீ மனப்பாடம் செய்யும்போது
உன் இதழ் முனுமுனுக்கும்மே...!
அந்த நிமிடங்களை ரசிப்பதர்காகவே
உன்னை காதலிக்க வேண்டும்...!
நீ படிக்கும்போது
நெஞ்சில் வைத்திருக்கும்
புத்தகத்தின் மீது
பொறாமையாக இருக்கிறது....!
நீ எழுதும்போது
உன் விரல்களுக்குள்
சிக்கிக்கொண்ட பேனவாகவே
இருக்கிறது என் காதலும் உன்னுள்....!
நீ மென்பொருள்
படிக்கிறாய் .......!
நான் உன்பொருள்
படிக்கிறேன்......!
இருவரின் மெய்பொருள்
காண்பதே காதல்.....!
Sunday, September 26, 2010
காதல்
கவிதையாய் சிலருக்கு.....
காயமாய் சிலருக்கு ......
மாயமாய் சிலருக்கு.....
மலரினும் மெல்லிய ஒன்று....
மயில்தோகையாய் இன்றும்...!
கனவிலும் கவிதையிலும்
தவிர்க்க முடியாத ஒன்று...!
தாயிடமும் உண்டு....
நண்பர்களிடமும் உண்டு....!
சில வெற்றியிலும் பங்குபெறும்....!
சில தோல்விகளிலும் பங்குபெறும்...!
உயரத்தையும் காட்டும்...!
மரணத்தையும் காட்டும்...!
உள்ளே வர அனுமதி தேவையில்லை ....!
வெளியே செல்ல அனுமதி கொடுப்பதில்லை...!
மண்ணில் பிறந்த ஒவ்வொரு
ஆணும் பெண்ணும் சுவாசித்த ஒன்று...!
உள்ளுக்குள் இருக்கும்வரை பட்டாம்பூச்சி ....!
வெளியே வந்துவிட்டால் கம்பளி பூச்சி...!
ஒற்றை ரோஜாவில் உலகையே உலுக்கும்...!
ஒற்றை வார்த்தையில் உலகையே கலக்கும்...!
இதயத்தின் பெண்டுலத்தை
தட்டிவிட்டு ஒளிந்துகொள்ளும் .....!
உனக்குள்ளும் உண்டு...!
எனக்குள்ளும் உண்டு ...!
உலகறிந்த ஒன்று....!
காதல்
வலிகள்
காதலை இதயத்தில்
அடக்கிகொண்டு.......!
கண்ணீரை உதட்டில்
மறைத்துக்கொண்டு......!
காத்துக்கொண்டு இருக்கிறேன்
உன் இருவிழி பார்வைக்காக.........!
நீ பேசாமல் சென்றிருந்தாலும்
பரவாயில்லை...!
ஆனால் நீ பேசிவிட்டு செல்கிறாய்
"பேசாமல் இரு" என்று....!
ஒவ்வொருவருக்கும்
புனைப்பெயர் வைத்த நீ...
காதலுக்கு என்ன மௌனம்
என்றா பெயர் வைத்து இருக்கிறாய்....!
என் கன்னத்தில் கண்ணீரின் ஈரப்பசையில்
இன்னும் ஒட்டிக்கொண்டு உள்ளது...
உன் மீது எனக்கு உள்ள காதல்....!
உன் முகம்
அசையும் திசையில்தான்
என் தினசரி உதயம்....!
உனக்கு
வியர்கும்போதேல்லாம்
என் கைக்குட்டை
உனக்கு தேவைப்பட்டது......
உனக்கு
கோபம் வரும்போதெல்லாம்
என் தொலைபேசி எண்
உனக்கு தேவைப்பட்டது......
உனக்கு
சந்தோஷம் வரும்போதெல்லாம்
என் கண்கள்
உனக்கு தேவைப்பட்டது......
இப்போது
நான் இருண்டு கிடக்கிறேன்
நீ இல்லாமல்
என் கவிதைகளுடன்.......!
Friday, September 24, 2010
பேருந்தும் நீயும்
காதல் ராட்சசியே...!
உன் பார்வை பிரம்பாலும்
உன் கூந்தல் சாட்டையாலும் அடித்துவிட்டு
மௌனமாகவே அமர்ந்து வருகிறாய்.....!
கல்லூரி பேருந்தில்.....!
அழகே....!
நீ கைக்குள் அடக்கி
வைத்துப்போகும் புத்தகத்திடம்
கேட்டுப்பார்....!
உன் இளமையின் முழுமை புரியும்....!
நீ இடப்க்கமாய் திரும்பி
என்னைபார்த்த
முதல் பார்வையிலேயே....!
வலப்பக்கம் சரிந்துவிட்டதடி
என் இதயம்.....!
நீ சுழித்துவிட்டு சென்ற
உதட்டு மடிப்பில்
ஒட்டிக்கொண்டுள்ளது எனது மனசு...!
உன்னுள் ஒன்றாக விரும்பினால்....!
இதயத்தில் கருவுற்று....
கண்களில் பிறந்து....
கன்னத்தில் வாழ்ந்து ....
உதட்டில் மடியும்.....
கண்ணீராக விரும்புகிறேன்....!
சாலையில் வேகமாக செல்லும்
பேருந்தை நோக்கி காற்றில்
அதன் பின் பறக்கும் காகிதம் போல்தான்..!
என் கவிதைகளும் உன்னை
நோக்கியே பயணிக்கிறது...!
விதவிதமாய் வெட்கங்களை
எங்கே சேர்த்து வைத்திருக்கிறாய்....!
நான் உன்னை தீண்டும்போது மட்டும்
அழகாய் அளவாய் வெளிப்படுதுகின்றாய்...!
துருவங்களில் உரைந்து நிற்கும்
நீராய் என்னுள் உரைந்து நிற்கிறது
நம் காதல்.....!
நீ என்னிடம் பேசும்போது
உன் காதோரம் விளையாடும்
தோட்டின் மீதுதான்
என் கோபப்பார்வை......!
உன் காதோரம் சரிந்து
விளையாட என் இதழுக்கு மட்டுமே
உரிமை உள்ளது.....!
நீ தலை சாய்த்து சிரிக்கும்
அழகுச் சிரிப்பில்....!
மலர்ந்து இருப்பது உன் இதழ்
மட்டும் அல்ல என் இதயமும் தான்....!
என் ஒவ்வொரு கவிதையும்
படித்துவிட்டு ....!
கவிதைக்கு நீ கொடுக்கும் முத்தம்களில்தான் என் அடுத்த கவிதைகளின் ஆரம்பம்.....!
ஒவ்வொரு மின்னலிலும் 23 லட்சம் வோல்ட் மின்சாரம் பாய்கிறாதம்...!
உன் மின்னல் பார்வையை விட
இது ஒன்றும் அதிகம் இல்லை....!
எங்கே கற்றுக்கொண்டாய்
தேவதையே....!
கண்ணில் தந்தியடிக்கும்
வித்தையை......!
காதலுக்காக
உன்னில் மிச்சமும்
என்னில் சொச்சமும் தான்
கவலைகள்.....!ஆனால்
மீத மொத்தமும் காதல்தான்
கரைந்துகொண்டு இருக்கிறது நம்முள்......!
நீ நின்றுசென்ற இடத்தில்
நின்று ஆழ்ந்து சுவாசிப்பேன்....!
உன் மூச்சுக்காற்று
என் நுரையிரல் வரை பாயும் வரை...!
உனக்கு பரிசலிக்கவே
காத்திருகின்றன
என் ஓவ்வொரு எழுத்துக்களும்....!
ப்ரம்மனுக்கும் எமனுக்கும் ஏதோ
ஒரு தொடர்புபோலும்.....!
உன்னை படைத்து பலரை
இறக்கச்செய்கிரான்....!
உன் அழகில்....!
உன் மொட்டைமாடி துணிகளிடம்
கேட்டுப்பார்.....?
எவ்வளவு முறை நான் உன் வீட்டை
கடந்து சென்றேன் என்று.....!
நீ எனக்கு பிடிக்கும்
முந்தானைக் குடைக்காகவே
மழையில் நனையா வேண்டும்
உன்னுடன்.....!
வார்த்தைகளால் எழுதமுடியாத
கவிதைகள் இன்னும் மிச்சம் இருக்கிறது
என் கன்னத்திலும்.....
உதடுகளிலும்.....
நீ எழுதிவிட்டு சென்ற கவிதைகள் சில....!
Subscribe to:
Posts (Atom)