Sunday, November 28, 2010
திருவிழா தேவதை......!
திருவிழா கூட்டத்தில் உன்னைத்தேடி
எட்டிப்பார்க்கையில் என்னை
உரசிப்போனாய் தேவதையாய்...!
இருவரும் கூட்டத்தில் ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொண்டே நடை பழகிய நம் கால்கள்...!
"சீக்கிரம் வா" என்று உன்னை
அதட்டிய உன் அம்மா...!
அவர் கைபிடித்தபடி கூட்டத்தில் கலந்து
சிறிது தூரம் சென்றவுடன் திருப்பி
என் முகம் துழவிய உன் கண்கள்.....!
ராட்டினத்தை கண்டவுடன்
"அதுல சுத்தணும்" என்றாய் வெகுளியாய்
உன் அப்பாவிடம்.....!
என் பயம் அறியாத உன் அப்பா
"போயிட்டு வா" என்றார்....!
ராட்டினத்தில் ஏறும் போது
"போகாதே" என்று தலை அசைத்தேன்...!
நீ பயப்படுவாயோ என நான் பயந்து....!
நீயும் வா என்றாய் உதட்டை சுழித்து....!
அந்த சுழலில் சுருண்டு விழந்தவனாய்.....!
ராட்டினப் பயணம்.... ! உன்னுடன்.... !
உற்சாகத்திலும் பயத்திலும் பலர் அலற ... !
இமைக்காமல் உன்னை பார்த்துக்கொண்டிருந்தேன்
பயத்துடன்....!
பதறாமல் பறந்துகொண்டிருந்தாய் ராட்டினத்திலும்...!
கீழே இறங்கி கண்மூடி திறந்தபொழுது
நீ இல்லை என்னோடு... !
தேடித் தோற்றேன் உன் முகம் காணாமல் ....!
இப்போது தனியாக சுற்றுகிறது
ராட்டினமும்....!
உன்னைத் தேடி என்
இதயமும்....!
அன்பே...!
Subscribe to:
Comments (Atom)



