Thursday, November 17, 2011

இடைவெளி....!!!!

 
ஒன்றரை மணி நேரம் உனக்கு பின்....
 நீ வாழ்ந்துகொண்டிருக்கிற நிமிடங்களை
 இனி தான் கடக்கப்போகிறேன்.....!
 உனக்கும் எனக்குமான இடைவெளி இதுவா?
 ஆனால் எப்போதும்போல எனக்குள்
 நீ இருக்கிறாய்......
 என் கனவுகளுக்குள் வசிக்கிறாய்...!
என் நினைவுகளில் வாழ்கிறாய்....!
 ஆனால் என்ன
 எல்லாம் கனவுகளும்,நினைவுகளுமாய்
 நிறைந்து இருக்கிறது....!
 நிஜங்களுக்கு ஏங்கி....!
 நிழல்களை மட்டும் தாங்கி....!!!!!
  

மறக்கவில்லை.....!!!

  அழகியே....
  நான் எதையும் மறக்கவில்லை...
  உன் கைபிடித்து பூங்காவில்
  நடந்த நிமிடங்கள்...
  உன் தோள் சாய்ந்து கதை
  பேசிய நாட்கள்....
   உன் இமையை வருடிய
   என் விரல்கள்....
  உன் இதழ் திருடிய சனங்கள்....
  என்  கவிதைக்கு உரித்தனவளே...
  இதோ..
  என் எழுத்துகளும் நானும்
  கண்ணீருடன் காத்திருக்கிறது
  உன் கரம் தீண்ட..
                                                                                       உன் இதழ் தீண்ட.......

Sunday, November 6, 2011

அ முதல் ஃ வரை நீ...!

அழகிய
ஆபத்து நீ...
இதழின் இம்சை நீ...
ஈன்றவளுக்கு சமம் நீ...
உள்ளத்தின் உச்சரிப்பு நீ....
ஊக்கத்தின் உயரம் நீ......
எனக்குள் நீ....என்றென்றும் நீ....
ஏஞ்சல் நீ....
ஐயம் நீ.....
ஒய்யாரமாய் எனக்குள்  நீ....
ஓவியம் நீ...
ஔவையின் தமிழ் நீ....
என்னை கொல்லும் ஆயுதமும்
ஃ நீதான்...........!!!!!


Thursday, July 28, 2011


             
               உயிரைப்  பறித்து
              கையில் திணித்து 
               உலகை உருக்கி
              இதயம் சுருக்கி 
              கனவை கலைத்து 
              கண்ணில் மிதித்து
              மனதைப் பறித்து 
              உன் கையால் எரித்து 
              ஒரு புறம் எரிய
              மறு புறம் சரிய
              சதை சதையாய் பிரித்து 
             விதவிதமாய் சுவைத்து 
              கையில் ரத்தம் சொட்டச்சொட்ட
              காத்திருக்கிறது என் காதல்..!!!


Saturday, June 18, 2011

முதல் முத்தம்.....!

       
          

         
          அழகான இம்சையே....!
           நீ முத்தமிட்ட நீரில் தான்
           என் மீசை முடிகள் அரும்ப 
           தொடங்கியது.......!


               

சேமிப்பு...!



  உன் கனவுக்குள் கொஞ்சமும்
  என் கவிதைக்குள் கொஞ்சமுமாய் 
  நம் காதலை
  சேமித்துவைத்துள்ளேன்...!


    

மகளிர் விடுதி....!




    மகளிர் விடுதி 
   தேவதைகளின் விடுதியானது
    நீ சேர்ந்தபின்........!!!! 

முத்தம்...



   
   

    உன் இதழ் வரிகளின் 
    கவிதை எழுதவே
    காத்திருக்கிறது 
    என் முகரோமங்கள்....! 


      

     

சின்ன மனசு....!

  

  என் கைபிடித்து....
  என் அருகில் அமர்ந்து....
  தலை சாய்த்து,கண்ணில் மொழிபேசி 
  என் முகம் பார்கதே....
 சிலிர்த்து சின்னப்  பின்னம்மாகிறது
 சின்ன மனசு......! 

Tuesday, May 31, 2011

இதயம்....



நீ கடைக்கு போகும் அழகில்

                      தானாகவே போய் அமர்ந்து கொள்கிறது

                                    என் இதயம் நீ எடுத்துச்செல்லும் கூடையில்.....!   

கடை வீதி.....

    

 என் கைபிடித்து கடை வீதியில் 
 கூட்ட நெரிசலில் 
 உன்னை அழைத்துவரும் வேளையில் 
 நம் உள்ளங்கையில் கசியும்    வியர்வையின் ஈரப்பசை சொல்லும் 
 நம் காதலின் நெருக்கத்தை....!

மனசு.......

     



      நீ அடிக்கடி ஒதுக்கிக்கொள்ளும் 
      உன் காதோர  கூந்தலுடன் சேர்ந்து 
      ஒதுங்கி கிடக்கிறது என் மனசு....!
       

Sunday, May 29, 2011

அ...ஆ....



நான் கிறுக்கி எழுதும் எழுத்துக்கெல்லாம்

அர்த்தம் உண்டோ என்று தெரியவில்லை..?

ஆனால் நான் எழுதும் ஒவ்வொரு எழுத்தும்

உனக்காகவே.........!

Wednesday, March 2, 2011

காதல்....!

         

           மழையாக நான்..........!

          குடையாக அவள்.....!

          நனையாமல் காதல்...!

Monday, February 28, 2011

ரசிக்கிறேன்.....!

                            
                                           நீ சிரிக்கும்போது உன் முகம் சரியும் 
                                           திசை பார்த்து  ரசிக்கிறேன்.....! 

                                          நீ பேசும்போது உன் இதழின் 
                                          துடிப்பை பார்த்து  ரசிக்கிறேன்.....! 

                                         நீ என்னுடன் நடக்கும்போது உன் கன்னங்களின்
                                         கவிதை படித்து  ரசிக்கிறேன்.....!
                                         
                                            

                                         நீ என் கவிதைகளை படிக்கும்போது
                                         உன் புருவங்களின் உயர்வில் வழுக்கி  ரசிக்கிறேன்.....! 

                                        உன் கைபிடித்து பயணிக்கையில் உன் தோள்களில் 
                                       என் தலை சாயும் நொடிகளை  ரசிக்கிறேன்.....! 

                                        நீ முத்தம்தரும் வேளையில் உன் இமைகளின் 
                                        படபடப்பை  ரசிக்கிறேன்.....! 
                       
                                        ரசிக்கிறேன் காதலையும் கவிதை பாட வைத்த
                                        உன்னையும் ஒரு காதலனாய்.....!

காத்திருப்பு....!

                    

                    நான் எழுதிய கவிதைகள் 
                   அனைத்தும் அணிவகுத்து நிற்கின்றன....!
                   
                   
                   உன் இதழ் முனுமுனுபில் சிக்கிக்கொள்ளவும்...
                   உன் இதய கூட்டில் வாழ்ந்து விடவும்....! 





Wednesday, February 23, 2011

நன்றி....!


                                         எதைச்சையாக நான் தினமும்
                                        கண்ணாடியை பார்க்க நேரிடும் போதெல்லாம் 
                                        என் கண்களுக்கு நன்றி சொல்வேன் 
                                        உன்னை எனக்கு காட்டியதற்காக..........!

                                     



Wednesday, January 26, 2011

உடையழகி....!


உடையழகி


                                            அந்த துணிக்கடைக்குள்
                                            நீ நுழைந்ததும் அலங்கார பொம்மை 
                                            ஓடி ஒளிந்து கொண்டது 
                                            உன் அழகின் அளவு தாங்கமுடியாமல் .....!

                                            தேவதைகளுக்கான உடை 
                                            இன்னும் இங்கே இறக்குமதி 
                                            செய்யப்படவில்லையென 
                                            ஊழியர்கள் எல்லோரும் 
                                            உன்னையே உற்றுப்பார்க்கிறார்கள் ...!



                                           ஒவ்வொரு சுடிதாரையும் 
                                           நீ உன் உடம்பில் ஒட்ட வைத்து  
                                           ஒரு ஒப்பனையோடு 
                                           கண்ணாடியில் அழகு பார்க்கிறாய்...!

                                           ஆனால் ...
                                           ஒவ்வொரு சுடிதாரும் 
                                           உன்னை அணிந்து பார்த்து 
                                           கண்ணாடியை வெறுப்பேற்றுகின்றன ....!
 
                                           இதுவரை உன்னிடம் இல்லாத 
                                           கலரென்று எதுவுமில்லை...
                                           நீ வெள்ளை சுடிதாரை அணிந்தாலும் 
                                           உன் உடல் தொட்ட வெட்கத்தால் 
                                           அது வண்ணமாகிவிடும் ....!



                                           விலைப்பட்டியலை விலக்கிப்பார்க்கிறாய்..
                                           நான் மனதுக்குள் நினைத்துக்கொள்கிறேன் ...
                                           ""பட்டின் விரல் பட்டால் 
                                              பருத்தியின் விலையென்ன கூடியாவிடும்.?""

                                           ஒருவழியாய் 
                                           தேடிமுடித்து ....
                                           தேர்ந்தெடுத்து ....
                                           பணம்கட்டி ....
                                           விடைபெற்று...
                                           வெளியே வந்து திரும்ப்பிப் பார்த்தால்.....

                                           உன் பிரிவை நினைத்து 
                                           அந்த துணிக்கடை 
                                           உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கிறது .....

                                           என் எல்லா மாடிகளும் 
                                           சுடிதார் பிரிவுகளாய் 
                                           இருந்திருக்க கூடாதா என்று...!    
 


Tuesday, January 4, 2011

உன்னுடனான பேருந்து பயணம்.....!

                                             உன்னுடனான பேருந்து பயணம்......!
                                            அந்த சில மணி நேர பயணத்தில்
                                            ஓராயிரம் கவிதைகளை
                                            சிந்திவிட்டு போவாய்....!
                                            அதிலும் அந்த ஜன்னலோர
                                            காற்று மற்றிவிட்டு போகும்
                                            சில மாற்றங்களை நாம்முள்...!

                                            அந்த ஜன்னலோர இருக்கையை தான்
                                            நீயும் விரும்பினாய்...!

                                            நீ அமர்ந்த இருக்கை
                                           எனக்கு நன்றியை உதிர்த்தது
                                           மற்றவை மண்டியிட்டு அழுதது....!

                                           ஜன்னலோர காற்றில்
                                           மிதந்து வந்த கூந்தல்
                                           என் கன்னத்தில் தரை இறங்கியது....!

                                          முதல் முறை விமான பயணத்தில்
                                          தரை இறங்கும்போது ஒரு வித
                                          சிலிர்ப்பு வரும் அதை உணர்தேன் அன்று....!

                                          அந்த கலைந்த கூந்தலை
                                          நீ கோதிக்கொள்ளும்  அழகில்....!                                                                             
                                          சில அழகியல் கட்டுரைகளை
                                          எழுதலாம்.....!




                                        
 
                                            இடது கை கட்டைவிரல் உன் முன் முடியை
                                            காது வழி பின் தள்ளும்போது....!
                                            உயிரை இழுக்கிறது என்னுள்
                                            சில ஹார்மோன்கள்.....!
                    
                                            உன் உள்ளங்கை உஷ்ணத்தில்
                                            என் உள்ளங்கை ரேகை அழிய
                                            இழுத்துவைத்து கொள்வாய்....!
                                            சில சில்மிஷ ஜீன்கள்
                                            கிறுக்கு பிடிக்கும் என்னுள்...!

                                            சாய்ந்த கோபுரத்தின் திறப்பு விழா அன்று
                                            காற்றில் விலகிய உன் துப்பட்டாவால் திறந்தது....!
                                            நொடி பொழுதில் சரி செய்துவிட்டு
                                            நான் பார்த்ததை நீ பார்த்ததும்
                                            செல்லமாய் ஒரு குட்டு உன் மோதிர விரலால்...!
                                            உச்சி குளிர்ந்து என் சிரம்...!
                                          என் கைபிடித்து நீ என் தோள் சாய்ந்து
                                          பயணிக்கும் நொடியில்.....!
                                          நிலச்சரிவுகள் என் இதயத்தின் ஆழத்தில்....!

                                          நீ சாய்ந்து படுக்கையில்
                                          தேய்ந்து போகிறது இதயக்கூடு....!

                                          அஹிம்சையாய் சில இம்சைகளை
                                          கொடுத்துவிட்டு சென்றாய்....!

                                          காத்துகொண்டு இருக்கிறேன்
                                          நானும்..!
                                          பேருந்தும்...!
                                          மீண்டும் உன்னுடனான ஒரு பயணத்திற்கு....!

Monday, January 3, 2011

காதல் வந்துவிட்டால்......!

                                                       
                                                  வெள்ளை காகிதங்களில்  உன்
                                                  கிறுக்கல்களை அச்சிடுவாய்.....!

                                                  உன் பிம்பம் பார்த்தே சலித்துபோகும்
                                                  உன் வீட்டு  கண்ணாடி....!

                                                  செல்போன் உன்னுடைய நண்பர்களுள்
                                                  ஒன்றாகும்....!
                                                     

                                                      SMS ல் ஊட்டசத்து பெறுவாய்.....!

                                                     தனிமையை துணை ஆக்குவாய்....!

                                                     இரவு நேர தொலைபேசி
                                                     பேச்சுகள் நீளும்.....!
                                                 
                                                     தலையணைக்கு பக்கத்திலேயே
                                                     உன் செல்போன் உறங்கும்....!
                                                   
                                              
                                                    விடுப்பு கடிதம்கூட எழுத தெரியாத நீ
                                                    காதல் கடிதம் எழுத கற்றுக்கொள்வாய்...!

                                                    கனவுகளில் கவிதை வளர்ப்பாய்....!
                                               
                                                   வருடங்கள் நிமிடங்களில் கரையும்...!
                                                   உலகமே உனதாகும்...!
                                                   

                                                  
                                                   செல்போன் தெய்வமாகும்....!
                                                   SMS கள் அர்ச்சனையாகும்....!
                                                   அழைப்பு மணி பிரசாதமாகும்....!
                                                 
                                                  இது அத்தனைக்கும் அடிமையன்
                                                   நானும் ஒரு காதலனாய்...........!