Saturday, February 13, 2016

எதுவும் மாறவில்லை.....

                                                   எதுவும் மாறவில்லை.....

உனக்கும்  எனக்குமான  கனவுகள் சில நேரம்
சிதைந்து இருக்கலாம்.....
 உன்னை  நானோ  என்னை நீயோ சில நேரம்
மறந்து இருக்கலாம்.....
 உன் கண்ணெதிரே நன் இல்லாத பல நாட்கள்
 கடந்து இருக்கலாம்.....
ஆனால் எதுவும் மாறவில்லை.......

நானும் நீயும் விரல்பிடித்து ஊர்வலம் வந்த
பூங்கவும் கடைவீதியும் காத்துக்கிடக்கிறது......
உன் மடியும் ஏன் தோலும் ஏங்கி  கிடக்கிறது
தலை சாய்த்து  கொள்ள....
நாம் பகிர்ந்துகொண்ட சில திருட்டு முத்தங்கள்
இன்னும் உயிரோடு  மிச்சம் இருக்கிறது நம்முள்.....
எதுவும் மாறவில்லை தேவதையே.....

உன் புனைப்பெயர் நான் அழைக்காமல் இருக்கலாம்
சமூகத்தை நினைத்து....
உன்னை இறுக அணைக்காமல் இருக்கலாம்...
இந்த பாழாய்ப்போன
நாகரிகம் என்னை தடுத்து இருக்கலாம்...
காலம் மாறலாம்.....
உறவுகள் பெருகலாம் .....
நாகரிகம் தடுக்கலாம்.....
கனவுகள் கரையலாம்.....
காதல் குறையவில்லை...

இன்றும் என்றும் ஏன் மனைவியான காதலியே....
காதல் மாறவில்லை நம்முள்.....


காதலர் தின வாழ்த்துக்கள்.....
என்றும் காதலுடன்.
கார்த்திக்......

Wednesday, November 25, 2015

ஆறாத காயங்கள்....


                                புத்துயிரை உன்னுள் விதைத்து விட்டு
                                வெத்துயிராய் அலைகிறேன் தினமும் ..........

                                கனவிலும் கண்டதில்லை
                                பிரிந்து இருப்போம்மென.....

                                பகலெல்லாம்  இரவாகிறது....
                                இரவெல்லாம் கனவாகிறது.....
                                கனவெல்லாம் நினைவாகிறது....
                                நினைவெல்லாம்  நீயாகிறாய்......

                                இருயிராய் இருக்கும் உன்னை
                                நீரில்ல ஆறு ஒன்றில்
                                தனி மரமாய் விட்டுவந்தேன்.....
                                பாவத்தை சுமந்துவந்தேன்....

                                 கலங்காதே காதலியே...
                                அமிலமாய் இறங்குகிறது
                                 உன் ஒவ்வொரு கண்ணீர் துளியும் என்னுள்...

                                 என் பற்று நீ இருக்க விரும்பினாய்...
                                 உன் பற்று நான் இருக்க விரும்பினேன்...
                                 தெம்பற்று தெருவெல்லாம் அலைகிறேன்
                                 உன் முகம் தேடி..






கனவொன்று கண்டேன்

                                             
கனவொன்று கண்டேன்



                                     கருவறையில் குழந்தையின் 
                                     முதல் துள்ளல் 
                                     முதல் சினுங்கல் 
                                     முதல் இதயத்துடிப்பு 
                                     முதல் மூச்சு 
                                     முதல் சத்தம் 
                                     முதல் முத்தம் 
                                     முதல் கண்ணீர் 
                                     எல்லாமும் ஏன் கைப்பிடியில் 
                                     நடந்தது என்று   கனவொன்று கண்டேன்........

Sunday, July 26, 2015

பெயர் ஒன்றே போதும்...

அணு அணுவாய்  இறக்கிறேன் உன் மௌனத்தால்...
ஒவ்வொரு அணுவும் உயிர் தெழுகிறது உன் பெயர் உச்சரித்தல்...


Friday, March 28, 2014

கலர் கனவுகள்.......

                                                                      ர் கனவுகள்.......




சில வருட போராட்டம்...
பெயர்  சொல்லி அழைத்தே பழக்கப்பட்ட உனக்கு...
அதை  மாற்றி அழைக்கும் நேரம்.....

கண் இமைக்கும்  நேரத்தில்  நம்  கனவு தொடங்கிவிட்டது...
உன் நெஞ்சில் என்னையும் சேர்த்து இப்பொது இன்னொன்று
உன் உடம்பில் எது உரசினாலும் பொறமை படும் என் மனது
இன்று  பெருமை பேசி கொள்கிறது
நான் கட்டிய கயறு உன்னை தீண்டும்போது........

புதுக்கவிதையின் தொடக்கம்....
முதல் முத்தம்........
வார்த்தை கிடைத்த கவிஞனயாய்  .......
மிட்டாய் கிடைத்த குழந்தையாய் .....
பிரசவ வலிக்கு பிறகு முதலில்
குழந்தையின் முகம் பார்க்கும் தாய்யாய்.....
பட்டினிக்கு பிறகு கிடைக்கும் விருந்தாய்.....
பாழைவன மழையாய்.....
மார்கழி பனியாய்.......
தலை தரிக்க கிடைத்த சந்தோஷம் நம்முல்......

இதோ சில கனவுகள் என்னுள்...


உன் முகம் பார்த்து எழ வேண்டும் தினம் .....
காலை வணக்கம் என் இதழ் வழி நுழைந்து
உயிர் வரை பாய வேண்டும்....
நீ முத்தமிட்ட கோப்பையில் பருக வேண்டும் தேனீர்....

உன் சமயால் அறையில் எனக்கும் ஒரு இடம் வேண்டும்..
கவிதையோ.. கதையோ...
இருவரும் இணைந்து படிக்க வேண்டும்....
உன் கை பிடித்தே நடக்க வேண்டும்.....

 நான் எழுதும் கவிதையின்....
முதல் ரசிகை நீ.....
நீ  விட்டுச்சென்ற மிச்ச சொற்கள் தான்
என் கவிதைக்கு வார்தையகிறது......
கனவோ  கவிதையோ
உன்னிடம் எழுத வேண்டும் முதலில்;;;

சின்ன வயதில் தூங்கும்போது
கைபிடித்து  தூங்கும்  அம்மாவின் விரலாய்....
கட்டியணைத்து தூங்கும் தலையணையாய்......
நீ இருக்க வேண்டும்.......

அவசரமாய் வெளியே போகும் உனக்கு.....
உன்னை மிரட்டியேனும்
ஆசையாய் ஊட்டிவிட வேண்டும்.....

சின்ன சின்ன சண்டையில்
கண்ணீர் சிந்தும் உன் கன்னத்தினை
கையில் ஏந்தி பாசமாய் கடிக்க வேண்டும்......

என் மேல் நீ கோவிக்கும் ஒவ்வொரு முறைக்கும்
ஆயிரம் முத்தம் உனக்கு பரிசாக தரவேண்டும்........

செல்லமாய் நீ என்னை அடிக்கும் திண்டலுக்காகவே
சின்ன சின்ன தவறுகள் புரிய வேண்டும்....

நான் ஊரில் இல்லா சமயம்..
கண்கலங்கி தொலைபேசியில் குரல் கேட்டு...
முத்தம் தரும் நிமிடத்தில் உன் தொலைபேசியாய்
நான் இருக்க வேண்டும்.....

என் செல்ல கடியில் ஏற்பட்ட தழும்பை தொட்டுப்பார்த்து
சந்தோஷம் கொள்வாயோ...??
இப்படி நான் உன் உடம்பில் விட்டுப்போன
சில பொக்கிஷங்களை பார்த்து ரசித்து கொள்வாயோ உள்ளுக்குள்.....
நான் உன்னை கட்டியணைக்கும் போது
உடுத்திய சட்டையை பத்திரபடுத்தி வைப்பையோ..???
என் புகைப்படத்துக்கு நீ கொடுத்த முத்தத்தின் ஈரம்....
சத்தமாய் கேட்க்கும்  என் நெஞ்சுக்குள்.....
இரவில் அவசரத்தில் துக்கி எறிந்த உன் உடைகளை
தேடி கலைத்து போவாய்......
அந்த நிமிடங்களை அசை போடுவயோ மனதுக்குள்....?????
நான்  வரும் வரை........


நிமிடங்கள் கடந்து போகும் வருடங்களாக....
நீயும் நானும் பிரிந்த வேலையில்....

புதிதாய் ஒரு வாழ்க்கை
சின்ன சின்ன கனவுகள்
கடந்து போகும் துக்கங்கள்....
கலைந்து போகும் கண்ணீர்கள்.....
சந்தோஷம் மட்டும் வழிந்தோட ...
இறக்க வேண்டும் உன் மடியில் ஒரு நாள்.....
































Sunday, May 26, 2013

கவிதை.........


                                                                             
 பேனாவுக்கும் காகிதத்திற்கும் நடுவே  சிக்கித்தவிக்கும் எழுத்துகள் தான்    கவிதையாகிறது....!!

என் வீட்டில் காதல்.............



நம் வீட்டில் தேவையோ இல்லையோ
எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது....

இருந்துவிட்டு போகடும் என் காதலும் நம்முடன்....